கலிபோர்னிய காட்டுத் தீ: 150 பேரை காணவில்லை | தினகரன்

கலிபோர்னிய காட்டுத் தீ: 150 பேரை காணவில்லை

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவை சூறையாடிய பயங்கர காட்டுத் தீயில் 150க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த காட்டுத் தீ காரணமாக 15 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 1,500க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன. சொனோமா கவுன்டி பகுதியில் மாத்திரம் ஒன்பதி பேர் பலியாகியுள்ளனர்.

இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான சன்டா ரோசா நகர் தீயில் கருகி தரைமட்டமாகியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து 155 பேர் எங்கே என்று தெரியவில்லை என சொனொமா கவுன்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காட்டுத் தீ காரணமாக பெரும்பாலான மக்கள் ஒருசில மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னிய வரலாற்றில் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த இந்த காட்டு தீ காரணமாக எழுந்த புகை சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு பிரான்சிஸ்கோ வரை பரவியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 17க்கும் அதிகமான காட்டுத் தீகளால் 115,000 ஏக்கர்கள் நிலம் கருகி இருப்பதாக கலிபோர்னிய தீயணைப்பு பிரிவு தலைவர் கென் பிம்லொட் செவ்வாயன்று குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

Or log in with...