பாகிஸ்தானுடனான தொடர் வெற்றி இலங்கை தரவரிசையில் முன்னேற்றம் | தினகரன்

பாகிஸ்தானுடனான தொடர் வெற்றி இலங்கை தரவரிசையில் முன்னேற்றம்

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2--0 என்றகணக்கில் வெற்றி கொண்டதன் மூலமாக இலங்கை அணி தரநிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது.தொடருக்கு முன்னர் 7 ம் நிலையில் இருந்த இலங்கை அணி, இந்த வெற்றி மூலம் 6 ம் நிலைக்குமுன்னேற்றம் கண்டுள்ளது.

தரநிலையில் 125 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இந்திய அணி காணப்படுகின்றது.இரண்டாவது இடத்தில் தென் ஆபிரிக்க அணி 111 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில்இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.

4 ம் நிலையில் நியூசிலாந்து அணியும், 5 ம் நிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியும் தலா97 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.

இலங்கை அணி 94 புள்ளிகளுடன் 6 ம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 88 புள்ளிகளுடனும்,மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகள் அடுத்த நிலையிலும் காணப்படுகின்றன. 


Add new comment

Or log in with...