சைட்டம் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை | தினகரன்

சைட்டம் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை

 
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு காரணம் கருதி, பிரதமர் இல்லமான, அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களை அகற்றும் பொருட்டு பொலிசாரால் இவ்வாறு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்னாள் ஆரம்பமான குறித்த பேரணி காரணமாக கொழும்பு நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...