திருமாவளவன் - தமிழக முதல்வர் சந்திப்பு | தினகரன்

திருமாவளவன் - தமிழக முதல்வர் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், 'தமிழ்நாட்டில் உள்ள டெங்கு பாதிப்புகுறித்து முதல்வரிடம் விரிவாகப் பேசினோம். அதற்கு அவர், டெங்கு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம்.

கெயில் திட்டம் மாற்று வழியில் வர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அம்பேத்கர் மணிமண்டபத்தைப் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளோம். தமிழகம் இதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றோம். இதைப் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்' என்று கூறினார். 


Add new comment

Or log in with...