பாதுகாப்புச் செலவினத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு | தினகரன்

பாதுகாப்புச் செலவினத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

யுத்த காலத்தில் பாதுகாப்பு செலவினத்திற்கு ஒதுக்கிய 250 பில்லியன் ரூபா நிதியை, 2018 பட்ஜட்டிலும் ஒதுக்கியமைக்கு, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யுத்த காலத்தில் அதிக அழிவைச் சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீள் கட்டுமானம், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற் சாலைகள் எனப் பல முன்மொழிவுகளை 2018 பட்ஜட்டுக் காக முன்வைத்திருந்தோம். அந்த முன்மொழிவுகளுக்கு இன்னும்

திருப்தியான அளவில் நிதி கிடைக்கவில்லை.

நிதியமைச்சரும், பிரதமரும் நாடு திரும்பியதும் இது தொடர்பில் நேரில் சந்தித்து எமது மாகாணங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம். அதேநேரம்,யுத்தம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமது கண்டனத்தை தெரிவிப்போம். வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான தேவைகளை நிறைவு செய்யா விடின் 2018 வரவு செலவுத் திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்க வேண்டி வருமென்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...