வட கொரிய தடையை மீறிய 4 கப்பல்களுக்கு ஐ.நா தடை | தினகரன்

வட கொரிய தடையை மீறிய 4 கப்பல்களுக்கு ஐ.நா தடை

 

வட கொரியா தொடர்பில் விதிக்கப்பட்ட தடையை மீறிய நான்கு கப்பல்களுக்கு உலகில் எந்த துறைமுகத்திற்கு செல்லவும் ஐ.நா தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டிருக்கும் பெட்ரா 8, ஹவோ பான் 6, டொங் சான் 2 மற்றும் ஜி ஷுன் என்ற நான்கு கப்பல்களும் தடுக்கப்பட்ட பொருட்களை வட கொரியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக வட கொரியா மீதான தடைகள் தொடர்பான ஐ.நா குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த தடையானது ஐ.நா வரலாற்றில் முன்னெப்போதும் விதிக்கப்படாத ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தடை அறிவிக்கப்பட்டது.

வட கொரியா ஆறாவது ஆணு சோதனை மேற்கொண்டதை அடுத்து, ஐ.நா கடந்த ஓகஸ்டில் விதித்த தடைகளில் அந்நாட்டின் நிலக்கரி, கடல் உணவு மற்றும் இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த மாதம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு அந்நாட்டு புடவை மற்றும் தொழிலாளர்களுக்கு தடை கொண்டுவரப்பட்டது. 


Add new comment

Or log in with...