நவம்பரில் தேர்தலை நடத்த தாய் இராணுவ ஆட்சி உறுதி | தினகரன்

நவம்பரில் தேர்தலை நடத்த தாய் இராணுவ ஆட்சி உறுதி

 

தாய்லாந்தின் இராணுவ ஆட்சி நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் வரும் நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் அரசியலமைப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்களில் மாற்றங்களை கொண்டுவந்த நிலையிலேயே தேர்தலை நடத்த இராணுவம் முடிவு செய்துள்ளது. தேர்தல் நடைபெறும் சரியான திகதி 2018 ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று பிரதமர் பிராயுத் சான் ஒசா நேற்று அறிவித்தார். எனினும் தேர்தலை நடத்தும் திகதியை இராணுவ ஆட்சி கடந்த காலங்களில் தொடர்ந்து ஒத்திப்போட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போதைய இராணுவ சதிப்புரட்சிக்கு முன்னர் இருந்தது போன்ற முழு அளவிலாக ஜனநாயகம் ஒன்று நடைபெறவுள்ள தேர்தலில் இருக்காது என கூறப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் அரசியல்வாதிகளின் அதிகாரங்களை இராணுவ ஆட்சி புதிய அரசியலமைப்பில் கட்டுப்படுத்தி இருப்பதோடு இராணுவத்திற்கு கணிசமான அதிகாரங்களை பெற்றுக்கொண்டுள்ளது. 1932இல் முழுமையான முடியாட்சி முடிவுக்கு வந்த பின் தாய்லாந்தில் பல இராணுவ சதிப்புரட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 


Add new comment

Or log in with...