கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: 10 பேர் பலி | தினகரன்

கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: 10 பேர் பலி

கலிபோர்னியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் 1,500க்கும் அதிகமான சொத்துகள் அழிவடைந்திருக்கும் நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தெற்கு கலிபோர்னியாவில் இவ்வாறான காட்டுத் தீ பொதுவானது என்றபோதும் வறண்ட காலநிலை மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக தீ வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்த தீ திங்கட்கிழமை கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை 20,000க்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை எட்டு நகரங்களில் காட்டுத் தீ பரவி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

உயிரிழந்த 10 பேரில் சோனோமா நகரில் மாத்திரம் 7 பேர் பலியாகியுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் எதிர்வரும் காலங்களில் தீயை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான காலநிலை கிடைக்கும் அறிகுறிகள் குறைவாகவே உள்ளன. 


Add new comment

Or log in with...