கட்டலோனிய சுதந்திரத்திற்கு எதிரான அழுத்தம் அதிகரிப்பு | தினகரன்

கட்டலோனிய சுதந்திரத்திற்கு எதிரான அழுத்தம் அதிகரிப்பு

 

தனி நாட்டு பிரகடனத்தை தன்னிச்சையாக வெளியிட எதிர்பார்த்திருக்கும் கட்டலோனிய தலைவர் கார்லஸ் புயிக்டெமொன்டுக்கு தனது திட்டத்தை கைவிட அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

பலம் மிக்க அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ஸ்பெயினுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. பிரச்சினையை தீர்க்க ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் மற்றும் புயிக்டெமொன்ட் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பார்சிலோனா மேயர் வலியுறுத்தியுள்ளார்.

கட்டலோனிய தலைவர் அந்நாட்டு நேரப்படி நேற்று பின்னேரம் பிராந்திய பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்தார். இதன்போது தன்னிச்சையான சுதந்திர பிரகடனம் ஒன்று வெளியிடப்படும் நிலை குறித்து ஸ்பெயின் மத்திய அரசு அவதானத்துடன் உள்ளது.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதிக பெரும்பான்மை கட்டலோனிய மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக பிராந்தி அரசு கூறுகிறது.

எனினும் இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ஸ்பெயினின் செல்வந்த பிராந்தியங்களில் ஒன்றான கட்டலோனியா நாட்டின் கால் பங்கு ஏற்றுமதி வருவாயை கொண்டுள்ளது. 


Add new comment

Or log in with...