தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்ற மன்னார் புனித லூசியா பாடசாலை வீரர்கள் வரவேற்பு | தினகரன்

தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்ற மன்னார் புனித லூசியா பாடசாலை வீரர்கள் வரவேற்பு

அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப்போட்டியில் 16 வயது பிரிவினருக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித லூசியா ம.வி பாடசாலை அணியினர் முதலிடத்தை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீரர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு பள்ளிமுனை சென்-லூசியா விளையாட்டுக்கழகம், மற்றும் கிராம மக்களின் ஏற்பாட்டில் நேற்று முந்தினம் இடம் பெற்றது.

நேற்று முந்தினம் சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது குறித்த வீரர்கள்,பயிற்சி ஆசிரியர்,ஆதிபர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பவனியூடாக பள்ளிமுனை கிராமத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

-இதன் போது குறித்த வீரர்கள் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப -தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன்,மற்றும் கிராம மக்கள், என பலர் கலந்து கொண்டு குறித்த வீரர்களுக்கு அமோக வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மன்னார் நிருபர்- 


Add new comment

Or log in with...