கைதான நாமலின் நிறுவன பணிப்பாளர் இரேஷாவுக்கு பிணை (UPDATE) | தினகரன்

கைதான நாமலின் நிறுவன பணிப்பாளர் இரேஷாவுக்கு பிணை (UPDATE)

 
கைது செய்யப்பட்ட கவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான இரேஷா சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராக்கப்பட்ட அவர் வாக்குமூலம் வழங்கிய பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
 

நாமலின் நிறுவன பணிப்பாளர் விமானநிலையத்தில் கைது

கவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான இரேஷா சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளரான இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு, சர்வதேச பொலிசாரின் உதவியுடன் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
'கவர்ஸ் கோர்ப்பரேற் சேர்விஸ்' நிறுவனத்தின் ஊடாக 2013 - 2014 காலப் பகுதியில் ரூபா 30 மில்லியனை சட்டவிரோதமாக பரிமாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
குறித்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தபோதும், நாட்டை விட்டு வெளியேறியிருந்த அவர், நீதிமன்றில் ஆஜராகவில்லை.
 
இதனை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (09) சர்வதேச பொலிசாரான இன்டர்போலின் உதவியை நாடியிருந்தது. 
 
இதனையடுத்து இன்று படபொல ஆராச்சிகே ஓரநெல்லா இரேஷா சில்வா கைதாகியுள்ளார்.
 

Add new comment

Or log in with...