இன்றைய சைட்டம் பேரணிக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு | தினகரன்

இன்றைய சைட்டம் பேரணிக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு

 
மாலபே சைட்டம், தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அதனைத் தடை செய்யுமாறு கோரி, இன்று (10) பிற்பகல் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி தொடர்பில் மூன்று பல்கலைக்கழக சங்கங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு கோட்டை பொலிசாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர, ஒன்றிணைந்த பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் அழைப்பாளர் தென்பிட்டிய சுகதானந்த மற்றும் வைத்திய பீட செயற்பாட்டு குழுவின் பதில் அழைப்பாளர் பிரியங்கர பெரேரா ஆகியோருக்கே இத்தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் வழங்கப்பட்ட இத்தடையுத்தரவில்,
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளல், ஜனாதிபதி காரியாலயம் உள்ளிட்ட எந்தவொரு அரச அலுவலகங்களுக்குள்ளும் நுழைதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...