திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் அணி வெற்றி | தினகரன்

திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் அணி வெற்றி

இறக்ககாம்ம் பிரதேச செயலகம் நடாத்திய அணிக்கு 11பேர்களைக் கொண்ட 07 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் அணி வெற்றி பெற்றது.

ஐ.ஆர்.டி.எஸ். 2017 எனப் பெயரிடப்பட்டு இறக்காம்ம் குளக்கரைமைதானத்தில் 06 மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர் அணியை எதிர் கொண்ட திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் அணியினர் 11 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.

கடந்த 05 ம்திகதியும் 06ம்திகதியும் தொடர்சியாக இருநாட்கள் அம்பாரை மாவட்டதில் உள்ள பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 06 அணிகள் பங்கேற்றன.

இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு இறக்காம்ம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தினையும் பணப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர் அணியினர் முதலில் துடிப்புபெடுத்தாடி 07 ஓவர் முடிவில் 06 விக்கட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களைப்பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் அணியுனர் 04 ஓவர்களில் 11 விக்கட்டுக்களால் வெற்றிஈட்டிக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் உத்தியோகத்தர் அணியின் ரூபேஸ் 29 ஓட்டங்களைப்பெற்று ஆட்டநாயகனாகதெரிவுசெய்யப்பட்டதுடன் அதே அணியைச் சேர்ந்த செல்வகுமார் 118 ஓட்டங்களைப் பெற்று தொடர் ஆட்டநாயகன் விருதினை பெற்று கொ ண்டார். 2ம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர் அணிக்கு இறக்காமம் பிரதேச செயலாளரினால் கிண்ணணம்மும் பணபரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் உதவிபிரதேச செயலாளர் ஜெயருபன், இறக்காம்ம் உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹிஜா முஸப்பீர் மற்றும் இறக்காம்ம் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகர்தர் ஐ.எல்.எம்.றசாக் உட்பட பிரதேச செ யலக உத்தியோகத்தர்கள் உட்பட பெரும் திரலான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

(ஹிங்குறாணை குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...