ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்; நாமல் பொலிசில் ஆஜர் | தினகரன்


ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்; நாமல் பொலிசில் ஆஜர்

 
கடந்த வெள்ளிக்கிழமை (06) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்‌ஷ எம்.பி ஹம்பாந்தோட்டை பொலிசில் ஆஜராகியுள்ளார்.
 
இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூச்சல் குழப்பம் விளைவித்த நிலையில் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, நிலைமை மேலும் கட்டுக்கடங்காது சென்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோர், ஹம்பாந்தோட்டை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வீதிகளின் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
இதன்போது ஏற்பட்ட பதட்ட நிலைமை காரணமாக, 3 பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...