பணத்துக்கு எங்கே போவார்? | தினகரன்

பணத்துக்கு எங்கே போவார்?

கமலின் அணுகுமுறைகளை 25 வருடங்களுக்கும் மேலாக கவனித்து வரும் சினிமா உலகின் முக்கிய புள்ளி ஒருவர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

"கமல் எப்போதுமே எதனையும் வெளிப்படையாகப் பேசும் மனிதர். கறுப்புப் பணம் சம்பளம் வாங்க மாட்டார். வரி ஏய்க்க மாட்டார். அதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடியில்தான் இருக்கிறார். கட்சி ஆரம்பித்தால் ஏற்படக் கூடிய நெருக்கடி என்னவென்று தெரியும். மூன்றெழுத்து பெயர் கொண்ட கிறிஸ்தவ தொழிலதிபர் ஒருவர், எல்லா வகையிலும் உதவுவதாகச் சொல்லியுள்ளார்.

தொழிலில் நேர்மையாக இருக்கும் அந்தத் தொழிலதிபரை கமலுக்கும் ரொம்ப பிடித்து விட்டது. இதுபோக இன்னும் சிலர் முன்பணத் தொகையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என கள நிலைவரத்தைக் கச்சிதமாக உணர்த்தினார் அவர்.

"தமிழ்நாட்டில் 6 வருடமாக தொழில்கள் வளர கட்டமைப்பே இல்லை. ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடும் தோல்வி. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசம். இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தாமதமாவதால், கமல் போன்ற செல்வாக்குள்ளவர்கள் அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தால், தொழில் வளர்ச்சி ஏற்படும் என்கிற நம்பிக்கை கொங்கு மண்டல தொழிலதிபர்களிடம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் கமலுக்கு ஆதரவு செய்யக் காத்திருக்கிறார்கள்" என்கிறார் தொழில் துறையிலிருந்து ஓய்வுபெற்ற உயரதிகாரி ஒருவர்.


Add new comment

Or log in with...