பாகிஸ்தானுக்கு 317 ஓட்ட இலக்கு | தினகரன்

பாகிஸ்தானுக்கு 317 ஓட்ட இலக்கு

 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் துபாயில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு 317 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
பகலிரவு போட்டியாக இடம்பெறும் இப்போட்டியின் நான்காவது நாளான இன்று (09) 5 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள் என ஆட்டத்தை ஆரம்பித் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
 
குசல் மெண்டிஸ் 29
நிரோஷன் திக்வெல்ல 21
ரங்கன ஹேரத் 17
 
வஹாப் றியாஸ் 4/41 (9.0)
ஹரிஷ் சுஹைல் 3/1 (1.0)
யாசிர் ஷாஹ் 2/47 (12.0)
 
அந்த வகையில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியிலும் பார்க்க 220 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 96 ஓட்டங்களுடன் 317 எனும் ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை 482 & 96
பாகிஸ்தான் 262 & 15/1 (9)
 
நாளை இப்போட்டியின் இறுதி நாள் என்பதோடு, இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதனைத் தொடர்ந்து, 5 ஒரு நாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
 

Add new comment

Or log in with...