காரில் T56 ஆயுதங்கள்; சந்தேகநபர்கள் புகைப்படம் வெளியீடு | தினகரன்

காரில் T56 ஆயுதங்கள்; சந்தேகநபர்கள் புகைப்படம் வெளியீடு

 

அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி

 
கம்பஹா வைத்தியசாலைக்கு அருகில், கண்டுபிடிக்கப்பட்ட மூன்று T56 ரக துப்பாக்கி தொடர்பில் இரு சந்தேகநபர்களை தேட உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
 
முதல் நபர், அசங்க சம்பத் குமார, சமித்புர, மட்டக்குளிய
 
 
இரண்டாவது சந்தேகநபர் கம்ஹேவகே தாரக உதயங்க, அமரதுங்க மாவத்த, உடஹமுல்ல
 
 
குறித்த நபர்கள் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தவர்கள், கம்பஹா பொலிசாருக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
071 859 1611 - கம்பஹா பொலிஸ் தலைமையக பரிசோதகர்
033 222 2226 - கம்பஹா பொலிஸ் தலைமையகம்
 
நேற்று (02) பிற்பகல் 5.30 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான ஹைபிரிட் (Hybrid) கார் ஒன்றிலிருந்து இத்துப்பாக்கிகள் கண்டுடெடுக்கப்பட்டன.
 
குறித்த கார் சந்தேகநபரால் விட்டுச் செல்லப்பட்ட நிலையில், அக்காரில் பொருத்தப்பட்டிருந்த வாகன இலக்கம் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிசார் தெரிவித்தனர்.
 
அதன் அடிப்படையில் அக்காரின் சட்ட இலக்கத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதன் உண்மையான வாகன இலக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த காரின் பதிவு விபரத்திற்கு அமைய அதனை பதிவு செய்த யக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதோடு, குறித்த காரை, உரிமையாளர், பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த வாகன வாடகை நிறுவனமொன்றிடம் கையளித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
 
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, குறித்த நிறுவனத்தினால் மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வாகனம் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பில் கம்பஹா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, குறித்த விசாரணைக்காக GPS தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
 

Add new comment

Or log in with...