Friday, March 29, 2024
Home » புனிதர்கள் சீமோன், யூதா திருவிழா

புனிதர்கள் சீமோன், யூதா திருவிழா

அக்டோபர் 28 ல் திருச்சபை சிறப்பிக்கின்றது

by damith
October 24, 2023 10:06 am 0 comment

கத்தோலிக்கத் திருச்சபையானது புனித சீமோன் மற்றும் யூதா ததேயு ஆகியோரின் திருவிழாவைக் எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி கொண்டாடுகின்றது. இவர்களது விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அவர்களின் வாழ்வும் பணியும் நமக்கு சிறந்த அனுபவங்களைத் தருகிறது.

திருத்தூதர் சீமோனைக் குறித்து விவிலியத்தில் திருதூதர்கள் அட்டவணையைத் தவிர்த்து வேறு எங்கும் காணகிடைக்கவில்லை.

மாற்கு மற்றும் மத்தேயு நற்செய்தி நூல்களில் இவர் கனானியன் எனவும், லூக்கா நற்செய்தியில் தீவிரவாதி எனப்பட்ட சீமோன் எனவும் அழைக்கப்படுகின்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்களை ஆண்டுவந்த ரோமானியர்களுக்கு எதிரான கலகம் அவ்வப்போது வெடித்துக்கொண்டே இருந்தது. இப்படி கலகம் செய்தவர்களை ரோமானியர்கள் ‘தீவிரவாதிகள்’ என்று அழைத்தார்கள். இந்த ‘தீவிரவாதிகள்’ தங்களை ஆண்டுவந்த ரோமானியர்களின் அதிகாரத்தை முறியடித்து, யூதர்களின் ஆட்சியை நிலைநிறுத்தப் பார்த்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் ரோமானியர்களின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட ஒருசில யூதர்களுக்கு எதிராகவும் இவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஆனால் இத்தகைய ‘தீவிரவாதிகள்’ ரோமானியர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

இயேசு ரோமானியர்களின் அதிகாரத்தை முறியடித்து, யூதர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில்தான் தீவிரவாதியான சீமோன் இயேசுவின் குழுவில் சேர்ந்தார் ஆனால் இயேசு நாட்டிற்காக தன்னுடைய உயிரைத் தர நினைத்த சீமோனை, நற்செய்திக்காக தன்னுடைய இன்னுயிரைத் தரச் செய்கிறார்.

திருத்தூதரான தூய சீமோன் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தொடக்கத்தில் எகிப்து நாட்டிலும், அதன்பின்னர் பெர்சியா நாட்டில் நாட்டிலும் நற்செய்தி அறிவித்து அங்கேயே மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்று நம்பப்படுகின்றது.

தூய யூதா ததேயு கைவிடப்பட்டோர் மற்றும் அனாதைகளின் பாதுகாவலாராக இருக்கின்றார். இவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது கைவிடப்பட்டோர் மற்றும் அனாதைகளின் மீது அதிகமான அக்கறைகொண்டு வாழ்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர் அம்மக்களுக்கு பாதுக்காவலராக இருக்கின்றார். இன்றைக்கும் நாம் கைவிடப்பட்டோர் மீதும், அனாதைகளின் மீதும் அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறுதித் தீர்ப்பின்போது இயேசு, “நான் அந்நியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டாயா? என்றுதான் கேட்கின்றார். ஆகவே நாம் இப்படிப்பட்ட மக்கள்மீது அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்வோம்.

மிலியன் ஜேம்ஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT