பஸ் விபத்து; ஒருவர் பலி; 22 பேர் காயம் | தினகரன்

பஸ் விபத்து; ஒருவர் பலி; 22 பேர் காயம்

 
பஸ் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பஸ்ஸில் பயணித்த 22 பேர் படுங்காயம்பட்டு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பண்டாரவளையிலிருந்து மரங்காவெல கொஸ்கம பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கொழும்பு பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளை உடு விகாரகல எனும் பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
 
நேற்று (01) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை, தியத்தலாவ, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
இவ்விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் ஹப்புத்தளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 
 

Add new comment

Or log in with...