சுற்றுலா பஸ் விபத்து; முன்பள்ளி மாணவர்கள் உட்பட 18 பேர் காயம் | தினகரன்

சுற்றுலா பஸ் விபத்து; முன்பள்ளி மாணவர்கள் உட்பட 18 பேர் காயம்

 
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் 100 ஆவது மைல் கல் பகுதியில் இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் முன்பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
கொழும்பில் இருந்து இராஜங்கனை நோக்கி முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று முந்தல் 100 ஆவது மைல் கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லொறியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
 
இவ்விபத்தில் தனியார் பஸ்ஸில் பயணித்த முன்பள்ளி சிறுவர்கள் உட்பட 18 பேர்கள் காயமடைந்த நிலையில், உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
இராஜங்கனைப் பகுதியைச் சேர்ந்த முன்பள்ளிச் சிறார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிலுந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட சிறார்களை ஏற்றிக் கொண்டு கடந்த நேற்று (28) காலை கொழும்புக்குச் சென்ற குறித்த பஸ் கொழும்பிலிருந்து மீண்டும்  வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
 
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)
 
 

Add new comment

Or log in with...