விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதில் நபர் பலி | தினகரன்

விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதில் நபர் பலி

 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக பயணித்த கார், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் ஸ்தலத்திலேயே உயிரிந்துள்ளார்.
 
இன்று (29) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளின் பின்ஆசனத்தில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அம்பாறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயகவின் கார் கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த நிலையில், அம்பாறை, மகாஓய வீதியின் கரங்கவ பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவும் காரில் பயணித்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
 
விபத்தில், உகண பிரதேசத்தைச் சேர்ந்த திஸ்ஸபுர என்பவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
பாராளுமன்ற உறுப்பினரின் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(மாளிகைக்காடு குறூப் நிருபர் - எம்.ஐ.எம். அஸ்கர்)
 

Add new comment

Or log in with...