மஹிந்தவுக்கு சு.க. தலைமை பொறுப்பு கோரிய மனு தள்ளுபடி | தினகரன்

மஹிந்தவுக்கு சு.க. தலைமை பொறுப்பு கோரிய மனு தள்ளுபடி

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
 
குறித்த மனு இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதனை பிரதான மாவட்ட நீதவான் சுஜீவ நிஸ்ஸங்க தள்ளுபடி செய்தார்.
 
சுதந்திரக் கட்சியின் தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை, அப்பதவியிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஶ்ரீ.ல.சு.க.வின் தலைவராக நியமிக்குமாறு கோரியே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
 
ஶ்ரீ.ல.சு.கவின் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்கள் இருவரான பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியசாந்த மற்றும் நகர சபை உறுப்பினர் அசங்க ஶ்ரீநாத் ஆகியோரால் இரு மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...