காஞ்சனா -3 இல் கதாநாயகி ஓவியா! | தினகரன்

காஞ்சனா -3 இல் கதாநாயகி ஓவியா!

நடிகர் ராகவேந்திரா லோரன்ஸின் புதிய படமான 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் லோரன்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக வெளிவந்த இதன் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் அதே வரிசையில் காஞ்சனா-2 படத்தினையும் லோரன்ஸ் எடுத்தார்.

தற்பொழுது இந்த வரிசையில் காஞ்சனா-3 க்கான கதை மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 'காஞ்சனா - 3' இல் ஓவியா கதாநாயகியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 'பிக் பொஸ்' நிகழ்ச்சியில் கிடைத்த பெரும் புகழுக்குப் பிறகு நடிகை ஓவியா ஒப்பந்தமாகியிருக்கும் முதல் பெரிய படம் இது.

நடிகர் ராகவேந்திரா லோரன்சுடன் ஓவியா இருக்கும் படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது. 


There is 1 Comment

super selaction

Add new comment

Or log in with...