வெளிநாட்டில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு ரூபா 570 இலட்சம் புலமைப்பரிசில் | தினகரன்

வெளிநாட்டில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு ரூபா 570 இலட்சம் புலமைப்பரிசில்

 
2017 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டில் பணிபுரியும் மக்களின் பிள்ளைகளுக்காக புலமைப் பரிசில் வழங்க ரூபா 570 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் 2,885 பிள்ளைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார்.
 
இந்த வருடத்தில் புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் நவம்பர் மாதத்தில் மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகவுள்ளன.
 
அதற்கிணங்க ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த 869 மாணவர்களுக்கு ஒரு மாணவனுக்கு ரூபா 15,000/= வீதம் 13,035,000 ரூபாவும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 1,652 மாணவர்களுக்கு ஒருவருக்கு தலா ரூபா 20,000 வீதம் ரூபா 33,040,000, க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ள 364 பேருக்கு ஒருவருக்கு ரூபா 30,000 வீதம் ரூபா 10,920,000 என ரூபா 569 இலட்சத்து 995 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவாகி வெளிநாட்டிற்கு சென்றுள்ள பிள்ளைகளுக்கு கல்வியைத் தொடர இந்த புலமைப் பரிசில் உதவி வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
 
(பலாங்கொடை தினகரன் நிருபர் - அப்துல் சலாம்)
 

Add new comment

Or log in with...