வவுனியா சேமமடு சண்முகானந்தா அதிபர் அலுவலகம் தீக்கிரை! | தினகரன்

வவுனியா சேமமடு சண்முகானந்தா அதிபர் அலுவலகம் தீக்கிரை!

 
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று (25) இரவு தீக்கிரையாகியுள்ளது.
 
வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் இன்று (26) பாடசாலை பரீட்சிப்பு குழு செல்ல இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
 
இச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள், கோவைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. 
 
அலுவலகத்தின் முன்பக்க கதவினை இரும்பு கம்பியால் உடைப்பதற்கு முயற்சி செய்த சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
 
சம்பவ இடத்திற்கு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சென்று பார்வையிட்டிருந்தார்.
 
 
இச்சம்பவம்  தொடர்பான விசரணைகள் ஒமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
(கோவில்குளம் குரூப் நிருபர் - கந்தன் குணா)
 
 

Add new comment

Or log in with...