பெரிய வெங்காயத்திற்கு 100 வீத இறக்குமதி வரி | தினகரன்


பெரிய வெங்காயத்திற்கு 100 வீத இறக்குமதி வரி

 
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 100 வீத வரி அறிவிடுமாறு, நிதியமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
உள்நாட்டில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
கடந்த சில தினங்களாக உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Add new comment

Or log in with...