நள்ளிரவில் விபத்து; இருவர் உயிரிழப்பு; 6 பேர் காயம் | தினகரன்

நள்ளிரவில் விபத்து; இருவர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

 
கஹவத்தேஎல, நாரம்மல வீதியின் உடபொல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
இன்று (24) நள்ளிரவு கடந்து 12.15 மணியளவில், நாரம்மலவிலிருந்து கஹவத்தஎல நோக்கி பயணித்த லொறி  ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி வெட்டப்பட்டிருந்த மரமொன்றில் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
 
விபத்தில் லொறியில் பயணம் செய்த பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான ரோஷணி பிரியங்கா (48) மற்றும் சமன் பிரியந்த (50) ஆகிய இருவர் பாரிய காயங்களுக்குள்ளாகி பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர்.
 
இவ்விபத்தில், சாரதி மற்றும் மேலும் 06 பேர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மரணமடைந்தவர்களின் உடல்கள், பொல்கஹவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகள் இன்று (24) இடம்பெறவுள்ளதாக, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொல்கஹவெல பொலிசார் தெரிவித்தனர்.
 

Add new comment

Or log in with...