முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் மரணம் | தினகரன்

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் மரணம்

 
பொத்துவில் கோட்டக்கல்லி கடற்பகுதிக்குக் நீராடச் சென்று முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம்  இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பாணம பொலிஸார் தெரிவித்தனர்.
 
போல் ஸ்டுவாட் மக்லீன் (24) எனும் (Financial Times) பிரித்தானிய செய்தி நிறுவன ஊடகவியலாளர் நேற்று (14) கை கழுவச் சென்ற போது முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
 
சுற்றுலா நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்திருந்த மக்லீன், அறுகம்பை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
 
நண்பர்களுடன் பொத்துவில் குடாக்கல்லி கடற்பகுதிக்குக் நீராடச் சென்றிருந்த மக்லீன் முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கை கழுவச் சென்றபோது, அவரை முதலை இழுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
கடற்படையினர் மற்றும் பாணம பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பின்னரே அருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது
 
ஒக்டோபரில் தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த மக்லீன், மிகத் திறமையான, அர்ப்பணிப்புடனான ஊடகவியலாளர் என பைனான்சியல் டைம்ஸ் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழக பட்டதாரியான இவர், FT ஊடக நிறுவனத்தில் இரண்டு வருடங்களாக பயிற்சி ஊடகவியலாளராக பணியாற்றி வந்ததோடு, தனது விடுமுறைக்காக இலங்கை வந்திருந்த வேளையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான விசாரணையை பாணம பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 

Add new comment

Or log in with...