வஸ்கமுவ வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிகள் கொள்ளை | தினகரன்

வஸ்கமுவ வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிகள் கொள்ளை

 
வஸ்கமுவ தேசிய வனவிலங்கு பூங்காவின், வனவிலங்கு அதிகாரிகளுக்குச் சொந்தமான ஆயுத களஞ்சிய அறையிலிருந்து ஐந்து ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
 
குறித்த ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு, இவ்வாறு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றிருக்கலாம என பொலிசாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, 
 
ரி56 ரக துப்பாக்கி - 01
ரிப்பீட்டர் ரக துப்பாக்கி - 02
12 ரவை துப்பாக்கி - 02 ஆகிய ஆயுதங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக வில்கமுவ பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லைல என்பதோடு, வில்கமுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

Add new comment

Or log in with...