Home » மத்திய கிழக்கில் அமெரிக்க ‘வான் பாதுகாப்பு’ அதிகரிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்க ‘வான் பாதுகாப்பு’ அதிகரிப்பு

by damith
October 23, 2023 7:59 am 0 comment

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவத்தின் தயார் நிலையை அதிகரிக்கும் வகையில் அந்த பிராந்தியம் முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்பை செயற்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது.

பிராந்தியத்தில் விரைவில் மேலதிக தூருப்புகளும் நிலைநிறுத்தப்படும் என்றும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பட்ரோயிட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு படையணிக்கு மேலதிகமாக தாட் என அழைக்கப்படும் உயிர் வான் பகுதியை பாதுகாக்கும் அமைப்பும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படும் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது. இந்த தாட் அமைப்பு குறுகிய மற்றும் மத்திய தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தும் திறன் கொண்டதாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியம் எங்கும் ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பென்டகனின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் ஆரம்பித்தது தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்கா தனது இரு விமானதாங்கி கப்பல் மற்றும் போர் கப்பல்கள், ஜெட்களை இஸ்ரேலுக்கு நெருக்கமாக கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT