Home » பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மூன்று மாணவர்கள் சாதனை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மூன்று மாணவர்கள் சாதனை

மட்டு. புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் மூவர் சாதணை

by damith
October 23, 2023 6:30 am 0 comment

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையே உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியைச் சேர்ந்த 03 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளனர். இநிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியுள்ளது. இம்மாணவர்கள்,நேற்று முன்தினம் (21) மாலை 04. மணி அளவில் தனுஷ்கோடி கரைக்குச் சென்று, நேற்று (22) அதிகாலை காலை 03 மணியளவில் கடலில் குதித்தனர்.இந்நிலையில், நேற்று மதியம் 01 மணியளவில் இவர்கள் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர் .

மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர்கள் உட்பட கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த சாதனை, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், 15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்தனர். இவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியிருந்தது.பல அனுசரணையாளர்களுடன் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கான இணை அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT