பொருளாதாரம், நல்லிணக்கம் இலங்கையின் எதிர்பார்ப்பு | தினகரன்

பொருளாதாரம், நல்லிணக்கம் இலங்கையின் எதிர்பார்ப்பு

* அரசு ஆரம்பித்துள்ள பயணம் மெதுவானது; தெளிவான இலக்கை அடைவதே நோக்கம்

* ஐ.நா உட்பட சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி மைத்திரி வேண்டுகோள்

நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமையைப் பாதுகாத்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அரசின் பயணம் மெதுவானதாக உள்ளபோதும், தெளிவான இலக்ைக அடைந்துகொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை எதிர்பார்க்கும் இத்தகையை உன்னத இலக்ைக அடைந்துகொள்ள சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.

சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்துடன் விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர். எனினும் 30 ஆண்டுகால போர், சமூகங்களுக்கிடையிலான பிளவுகள் ஏற்பட்டிருந்ததால் நாட்டில் இன ஒற்றுமை, சகோதரத்துவத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்மொழி பேசும் சமூகங்கள் பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் இலங்கையில் நம்பிக்ைகயீனம், பழிதீர்க்கும் உணர்வு, குரோத சிந்தனைகளை நீக்கி அனைவரையும் நாட்டின் சுதந்திர புருஷர்களாக வாழவைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் நேற்று (20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி நாட்டில் வாழும் பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவோம். நம்பிக்கையீனம், பழி தீர்க்கும் உணர்வு மற்றும் குரோதத் தன்மையினை நீக்கி அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவோம்.

ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்.

நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டு நடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை மேம்படுத்தி கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்துள்ளேன். சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...