அர்ஜுன் மஹேந்திரன் முறி மோசடி ஆணைக்குழுவில் | தினகரன்

அர்ஜுன் மஹேந்திரன் முறி மோசடி ஆணைக்குழுவில்

 
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
 
கடந்த வாரம் (13) அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மத்திய வங்கியால் வழங்கப்பட்ட முறி கொடுக்கல் வாங்கலின்போது இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால், அர்ஜுன் மஹேந்திரனை இன்றைய தினம் (19) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
 

Add new comment

Or log in with...