உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரியில் | தினகரன்

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரியில்

 
உள்ளூராட்சி சபை தேர்தல், எதிர்வரும் 2018 ஜனவரியில் நடாத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.
 
இன்றைய (19) பாராளுமன்ற அமர்வின் போது, முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷவினால், "உள்ளூராட்சி சபை தேர்தல் எப்போது இடம்பெறும்" என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, எதிர்வரும் 2018 ஜனவரி மாதமளவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது உகந்தது எனும் தீர்மானத்தை தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உருவானதன் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷ முதன் முறையாக பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...