வினாத்தாள் கசிவு; ஆசிரியர், சகோதரருக்கு பிணை | தினகரன்

வினாத்தாள் கசிவு; ஆசிரியர், சகோதரருக்கு பிணை

 
கடந்த மாதம் இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வெளியான விடயம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரும் அவரது சகோதரரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலதிக வகுப்பு ஆசிரியரான ஆர்.ஏ. ஜினேந்திர ரணசிங்க மற்றும் அவரது சகோதரர் ஆர்.ஏ. நுவன் ரணசிங்க ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
 
குறித் விடயம் தொடர்பான வழக்கு, கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் இன்று (18) இடம்பெற்றபோதே நீதவான் அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
 
தலா ரூபா 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
 
அத்துடன் குறித்த இருவரையும், பிரதி ஞாயிறு தோறும் முற்பகல் வேளையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 

Add new comment

Or log in with...