அஹங்கமவில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிவு (UPDATE) | தினகரன்

அஹங்கமவில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிவு (UPDATE)

 
இச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
 

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலஸ்ஸகம, கதலுவ பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
 
கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த ஹோட்டல் ஒன்றின் கட்டடமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த விபத்தில் காயமடைந்த 05 பேர், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவர் குறித்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை தேடும் பணியில் பொலிசார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
இது தொடர்பான விசாரணைகளை அஹங்கம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

Or log in with...