ஓய்வு பெற்ற இ.மி.ச. ஊழியர்களுக்கு அழைப்பு | தினகரன்

ஓய்வு பெற்ற இ.மி.ச. ஊழியர்களுக்கு அழைப்பு

 
ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களை கடமைக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், சம்பள பிரச்சினையை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (12) முதல் நான்கு நாட்களாக பணி பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். 
 
இதனை கருத்திற்கொண்டு தடங்கலின்றிய சேவையை வழங்கும் பொருட்டு, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தகு வள அமைச்சினால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மின்சார சபையில் கடமையாற்றி, 2014 செப்டெம்பர் 01 இற்கு பின்னர் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, துறைசார் இயந்திரவியல் தொடர்பான பணியாளர்கள் மற்றும் சாரதிகளை, சுய விருப்பத்திற்கு அமைய தாங்கள் இறுதியாக பணி புரிந்த மின்சார சபை அலுவலகத்தில் இணையுமாறு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Add new comment

Or log in with...