வித்தியா கொலை வழக்கு; 27ம் திகதி தீர்ப்பு | தினகரன்

வித்தியா கொலை வழக்கு; 27ம் திகதி தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் (27) வழங்கப்படுமென ரயல் அட் பார் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் விசாரணைகள், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட்பார் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக ரயல் அட் பார் நேற்றுமுன்தினமும் (12) மற்றும் நேற்றும் (13) கூடியது.

தொகுப்புரையின் இறுதியில், 4, 7, 9 எதிரிகள் சார்பாக சட்டத்தரணி ஆ.கேதீஸ்வரன் தனது தொகுப்புரையின் சமர்ப்பணத்தை நீதிமன்றத்தில் முன் வைத்தார்.

அதன்போது, 4,7,9 ஆம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டின் சாட்சியங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென கோரினார்.

அதேவேளை, 5 எதிரி சார்பாக சட்டத்தரணி ரகுபதி மற்றும் 1,2,3,6,8ஆம் எதிரிகள் சார்பாக சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன ஆகியோர் தமது தொகுப்புரைகளின் சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

எதிரிகள் சார்பான சட்டத்தரணிகளின் தொகுப்புரைகள் நிறைவுபெற்ற பின்னர், எதிர்வரும் (27) தீர்ப்பு வழங்கப்படுமென அறிவித்ததுடன், அன்றையதினம் 11ஆவது எதிரியாக இருந்து அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனையும் நீதிமனறத்துக்கு சமுகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டதுடது. அவரை எதிர்வரும் (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...