369
அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ‘வை.எப்.எஸ்.சீ ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம்’ கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
அக்கரைப்பற்று பனங்காடு அக்னி விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (14) நடைபெற்ற இச்சுற்றுத்தொடரின் இறுதி போட்டியில் அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் அணியும் ஹிஜ்ரா அணியும் மோதிக்கொண்டன. இதில் வெற்றிக் கிண்ணத்தையும், ரொக்கப் பணப்பரிசினையும் அக்கரைப்பற்று ஹிஜ்ரா அணி பெற்றுக்கொண்டது.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்