மாலபே வைத்தியர்களுக்கு இங்கிலாந்தில் பணி புரிய தடை | தினகரன்

மாலபே வைத்தியர்களுக்கு இங்கிலாந்தில் பணி புரிய தடை

 
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்ற வைத்தியர்களுக்கு பிரித்தானியாவில் பணி புரிய அந்நாட்டு வைத்திய சபை அனுமதி மறுத்துள்ளது.
 
ஐக்கிய இராச்சியத்தில் (UK) மருத்துவர்களாக பணி புரிய விரும்புவோர் அந்நாட்டு வைத்திய சபையின் அனுமதியை பெற வேண்டும் என்பதோடு, அதற்காக முன்வைக்கப்படும் PLAB பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் குறித்த தகுதியை பெறும் பட்டியலில் 11 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரித்தானிய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
 
பிரித்தானிய மருத்துவ சபையினால் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இலங்கையிலுள்ள மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் (SAITM) பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பட்டியலில் ரஞ்சி பல்கலைக்கழகம் - மகாத்மாக காந்தி ஞாபகார்த்த மருத்துவ கல்லூரியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பட்டியல் வருமாறு
 
 1. 1. Belize
  • St Matthew’s University School of Medicine
  • Grace University School of Medicine
 2. 2. Cook Islands
  • St Mary’s Medical School
 3. 3. India
  • Ranchi University - Mahatma Gandhi Memorial Medical College
 4. 4. Liberia
  • Saint Luke School of Medicine
 5. 5. Saint Lucia
  • Atlantic University School of Medicine
  • Spartan Health Sciences University (where course of study commenced on or before 31 December 2008)
  • St Mary’s Medical School
 6. 6. Saint Vincent and the Grenadines
  • Saint James School of Medicine (St. Vincent, Anguilla and Bonaire campuses)
 7. 7. Senegal
  • St Christopher Ibrahima Mar Diop College of Medicine
 8. 8. Seychelles
  • University of Seychelles American Institute of Medicine (USAIM)
 9. 9. Saint Kitts and Nevis
  • Windsor University Medical School (where degree was gained on or after 31 October 2012)
 10. 10. Sri Lanka
  • Malabe Private Medical College (awarded by the South Asian Institute of Technology, Sri Lanka)
 11. 11. Ukraine
  • Lugansk State Medical University located in Lugansk (students who commenced or completed their studies after 30 September 2014)
  •  

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...