உலக சுற்றுலா மாநாட்டில் உப தலைவராக ஜோன் அமரதுங்க | தினகரன்

உலக சுற்றுலா மாநாட்டில் உப தலைவராக ஜோன் அமரதுங்க

 
சீனாவில் இடம்பெறும் உலக சுற்றுலா மாநாட்டில், ஆசிய வலயத்திற்கான உப தலைவராக அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் (13) சீனாவின் செங்டு நகரில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் உலக சுற்றுலாத்துறை மாநாட்டில் (UNWTO) 130 நாடுகளைச் சேர்ந்த 1,300 பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர்.
 
நான்கு நாட்கள் இடம்பெறும் 22 ஆவது மாநாட்டில் உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி குறித்து ஆராயப்படவுள்ளது.
 
சுற்றுலாத் துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள இப்பதவி, இலங்கைக்கு விசேட கெளரவமாக கருதப்படுகின்றது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...