‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு | தினகரன்

‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு

அத்திலாந்திக் கடலில் உருவாகிய ‘இர்மா' புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் 100-க்கும் மேற்பட்ட மோசமான கைதிகள் மாயமாகியுள்ளனர்.

வடக்கு அத்திலாந்திக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்திலிருந்து கரீபியன் தீவுகள் இன்னும் மீளாத நிலையில் நேற்றுமுன்தினம் வரை அங்கு 37 பேர் பலியாகியுள்ளனர்.

செயிண்ட் மார்டின் உள்ளிட்ட பல தீவுகளில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் வீசியது. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

புளோரிடா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சுமார் 6 மில்லியன்

மக்கள் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புளோரிடாவில் மட்டும் புயலினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரீபியன் கடலில் உள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ள சிறையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். தப்பி ஓடிய அனைவரும் மோசமான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தண்டனை வகித்து வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிகள் அனைவரும் தங்களுடன் ஆயுதங்கள் வைத்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் பொலிசார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...