நேஷன்ஸ் ட்ரஸ்ட் அணி சம்பியன் | தினகரன்

நேஷன்ஸ் ட்ரஸ்ட் அணி சம்பியன்

மேர்கன்டைல் லீக் கூடைபந்தாட்ட போட்டி 2017ல் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அணி வெற்றியீட்டியிருந்தது. பெண்கள் B பிரிவில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அணி IFS, மொபிடெல் மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டர் குரூப் ஆகியவற்றுக்கெதிராக போட்டியிட்டு இறுதிப்போட்டிக்காக தெரிவாகியிருந்தது.குழுவில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இரு அணிகளான MAS மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியன இறுதிப்போட்டிக்காக தகைமை பெற்றிருந்தன. இதன் போது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அணி வெற்றி வாகை சூடியிருந்தது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் மிஷிகா குணவிஜய போட்டித்தொடரின் மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராக தெரிவாகியிருந்தார்.நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அணியில் விளையாடிய வீரர்களில் கல்பனி ராமநாயக்க (தலைவர்), ஷனிகா ஜயசேகர, நிரோஷினி பைவா, ரோஸ்மேரி வன்லன்கென்பேர்க், மிஷிகா குணவிஜய, யொஹானி தயாரட்ன, துவான் அமத் (பயிற்றுவிப்பாளர்) மற்றும் யமுனா சில்வா (அணி முகாமையாளர்) ஆகியோர் அடங்கியிருந்தனர்.இறுதிப்போட்டியின் பின்னர் அணித்தலைவரான கல்பனி ராமநாயக்க உரையாற்றுகையில், “இது இலகுவான காரியமல்ல, ஆனாலும் நாம் கடுமையாக பயிற்சியெடுத்து இறுதிப்போட்டியில் வென்றுள்ளோம். எமது போட்டியாளர்கள் சிறந்த போட்டியை எமக்கு வழங்கியிருந்தனர். அணியான செயலாற்றியமை காரணமாக, எம்மால் திறமைகளை வெளிப்படுத்த முடிந்திருந்தது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி குடும்பத்தில் நாம் காணப்படுவதையிட்டு பெருமை கொள்கிறோம்.

சிறப்பாக விளையாடியமைக்காக நாம் பெருமை கொள்கிறோம், எமது பிரத்தியேக தன்னிறைவை அதிகளவு வழங்கியிருந்தது. அணியாக நாம் பெருமை கொள்வதுடன், எமது சகல சக ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. எமக்கு உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவிக்கிறோம், எமது வேலைப்பழு நிறைந்த சூழலும், அவர்களின் உற்சாகம் இன்றி எம்மால் இந்த வெற்றியை எய்தியிருக்க முடியாது” என்றார்.பிஸ்னஸ் டுடே சஞ்சிகையின் மூலமாக இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 25 வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் செளகர்யம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு தன்வசம் கொண்டுள்ள பெருமளவான நிதிசார் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன. நாடு முழுவதும் வங்கி 93 கிளைகளை கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...