இறுதிச்சுற்றில் மூன்றாவது வெற்றியை இலங்கை சுவீகரித்தது | தினகரன்

இறுதிச்சுற்றில் மூன்றாவது வெற்றியை இலங்கை சுவீகரித்தது

 

தமது ஆரம்ப போட்டியில் தோல்வியடைந்த போதிலும்,ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் உலக இறுதிப்போட்டி குழு மட்டபோட்டியின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் சிட்னி பல்கலைக்கழகம் எழுச்சிகண்டிருந்ததுடன்,அரையிறுதியில் இறுதி ஸ்தானத்தை தக்கவைத்துக்கொண்டது.

இந்தவெற்றியில்,புனேமரத்வாடமித்ர மண்டல் வர்த்தக கல்லூரிக்கு எதிரான போட்டியில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைகைப்பற்றிய வரும்,தனது அணிக்காக 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தவருமான சகல பிரிவிலும் சிறப்பாக விளையாடிய ஜோசப் கெர்ஷோவ் வீரரே பெரும் பங்கு வகித்திருந்தார்.

போட்டி ஆரம்பித்தவேளையில் மூன்றுஅணிகளுமே நாக்-அவுட் தொடர்பாக கருத்து மோதலை கொண்டிருந்ததுடன்,MMMC கல்லூரிமற்றும் கராச்சி, நஸிம பாத் ஜின்னா அரசகல்லூரி(JGCN)ஆகியன ஓட்டவிகிதங்கள் அடிப்படையில் முன்னேறிச் சென்றன.

நாக் அவுட்டில் தமது ஸ்தானத்தை பாதுகாப்பதற்காக வேண்டி போட்டியை வெல்வதற்கான தேவையை சிட்னி அணி கொண்டிருந்ததுடன்,ஜோசப் கெர்ஷோவோ அதிரடியாக பந்து வீசி எதிர் அணிக்கு 22 ஓட்டங்களை மட்டுமே எடுக்கவைத்திருந்தார். இருந்த போதிலும்,அவர்களது துடுப்பாட்டவீரர்கள் எட்டு விக்கெட்டுக்களுக்கு136 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். சிட்னி அணியின் துடுப்பாட்டத்தின் போது பவுண்டரிகளை பெற்ற ஒரேயொரு துடுப்பாட்டவீரரராக கெர்ஷோவ் விளங்கினார்.

இந்திய அணியினர் அரையிறுதிக்குள் நுழைவதற்கான தகுதியைபெறுவதற்கு தேவையான ஓட்டவிகிதங்களை பூர்த்தி செய்திருந்தால், 10.4 ஓவர்களில் 137 எனும் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்திருக்கலாம். ஆனாலும்,சிட்னியின் அதிரடி ஆட்டம் காரணமாக உடனடியாக தமது ஸ்தானத்தை இழந்தனர். 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து முதல் மூன்று ஓவர்களிலேயே அவர்களது எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாக்கப்பட்டன.

கொல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தில் நடைபெற்றபோட்டியில்,ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தை வெற்றியீட்டிய பங்களாதேஷ் சுயாதீன கலைகள் பல்கலைக்கழகம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

மொர்ஸலின் மொர்டாஸா இரண்டாவது நாளன்று ஐந்துவிக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன்,11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்ந்து தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த அதேவேளை, இடது கை பந்துவீச்சாளரான ஷரிஃபூல் இஸ்லாம் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

அவர்களின் முயற்சி காரணமாக ஹெரியட் வாட் 17 ஓவர்களில் 82 ஓட்டங்களைமட்டுமே பெற முடிந்தது.அவ் வெற்றி இலக்கானது ULAB இன் களவரிசையை நீடிக்கச் செய்ததுடன், 6 விக்கெட்டுகளுடன் 62பந்துகளுக்குமுகம் கொடுக்கவேண்டியிருந்தது.

மூன்றாவது நாளின் மிகப்பெரிய வெற்றிகளை, குழு மட்டபோட்டிகளின் மிகவும் உறுதி கொண்ட இரு அணிகளான தென்னாபிரிக்கா,வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை வர்த்தக முகாமைத்துவ கல்லூரி தனதாக்கிக் கொண்டன.கராச்சி, நஸிமபாத் ஜின்னா அரச கல்லூரிக்கு எதிராக தென்னாபிரிக்கா வடமேற்கு பல்கலைக்கழகம் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ஒட்டங்களைப் பெற்றிருந்தன.

இது அவர்களது அணியின் ஆரம்பதுடுப்பட்ட வீரர்களான விஹன் லுபெ மற்றும் ஜான்னேமன் மலன் ஆகியோரினால் விரைவாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 70 ஓட்டங்கள் காரணமாக வேசாத்தியமானது.NWU இன் வேகப்பந்துவீச்சாளர் ஜீன்-பெய்ரா லெரோக்ஸ் போட்டியில் உடனடிதாக்கத்தை ஏற்படுத்திது JGCN அணியிடமிருந்து போட்டியை நழுவச் செய்திருந்தார்.அவர்கள் 13வது ஓவரின் போது 74 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்ததுடன்,லெரோக்ஸ் 12க்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். JGCN அணியினர் 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதன் முறையாக உலக இறுதிப் போட்டியில் போட்டியிட்ட சிம்பாப்பே,தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல் கலைக்கழகத்தை தோல்வியடையச் செய்து ஆறு விக்கெட்டுக்களால் தனது வெற்றி இலக்கினை பிஎம் எஸ் அணி சு வீகரித்தது.

108 ஓட்டங்களால் NUST அணியை நீக்கியதில் பெரும் பங்காற்றிய BMS இன் ஓஃவ் ஸ்பின்னர்களான கோஷன் ஜயவிக்ரம மற்றும் கேஷான் விமலதர்மவிற்குநன்றிகள்.துடுப்பாட்டத்தின் போது,திலக்ஷ சுமனசிறி 11 பந்துகளில் இரு சிக்ஸர்களையும்,நான்கு பவுண்டரிகளையும் பெற்றுமொத்தமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன்,தொடக்க துடுப்பாட்டவீரர் தினுக் விக்ரமநாயக்க அதிக இன்னிங்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் தமது குழுவை முன்னோக்கி நகர்த்தியதுடன்,அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியுடன் போட்டியிடவுள்ளனர். 


Add new comment

Or log in with...