கிரிக்கெட் பின்னடைவை ஆராய கொழும்பில் மாநாடு | தினகரன்

கிரிக்கெட் பின்னடைவை ஆராய கொழும்பில் மாநாடு

இலங்கை கிரிக் கெட் அணியின் அண்மைக் கால பின்னடைவை சீர்செய்வது குறித்து ஆராய நாளை(15) கொழும்பு வோர்டஸ் ஏஜ் ஹோட்டலில் பாரிய மாநாடொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்கள், முன்னாள் தெரிவுக்குழு உறுப்பினர்கள், வீரர்கள் என கிரிக்கெட் துறையுடன் தொடர்புள்ள பலரும் கருந்து கொள்கின்றனர்.

இங்கு முன்வைக்கப்படும் யோசனைகளை கிரிக்கெட் சபையினூடாக முன்னெடுக்க இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. தற்போதைய கிரிக்கெட் துறை பின்னடைவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வோர்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் 15 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் முழு நாழும் இந்த மாநாடொன்று நடைபெறும். இதில் கிரிக்கெட் பற்றி எழுதும் ஊடகவியலாளர்கள் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.மாகாண மட்ட கிரிக்கெட் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உள்ள விடயங்கள் குறித்து தற்போதைய வீரர்களுக்குத் தான் தெரியும்.

தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு வௌியில் வருவது என்பது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவுகள் இங்கு எடுக்கப்படும்.இதனை கிரிக்கெட் சபையினூடாக முழுமையாக செயற்படுத்த உத்தேசித்துள்ளேன்.

தெரிவுக் குழு இல்லாத நிலையில் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு அணி தெரிவு செய்யப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

பயிற்சி முகாமிற்காக 25 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.எமது கோரிக்கைக்கு அமைவாக இறுதியாக இருந்த தெரிவுக் குழு இந்த குழாமை தெரிவு செய்தது.பாகிஸ்தான் சுற்றுப்போட்டி நெருக்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் 20ற்கு 20 போட்டியொன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதா என வினவப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர்,

பாகிஸ்தானுடனான போட்டி டுபாயிலே நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் சென்று ஆட இப்போதைக்கு திட்டம் எதுவும் கிடையாது.உலக சம்பியன் ​போட்டி அங்கு நடைபெற இருக்கிறது.

லாஹூரில் வைத்து எமது அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாம் மறக்கவில்லை.எமது வீரர்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து செயற்பட முடியாது.அங்கு பாதுகாப்பு நிலை சீரானால் அங்கு சென்று விளையாடுவது தொடர்பில் ஆராய முடியும்.எமக்கு பாதுகாப்பு தொடர்பில் 100 வீத உத்தரவாதம் அவசியம்.கிரிக்கெட் வீரர்களை பலிக்கடாவாக்க முடியாது. அதேவேளை கஷ்டமான நிலைமைகளில் பாகிஸ்தான் எமது நாட்டிற்கு கைகொடுத்துள்ளது. இரு நாட்டு உறவு குறித்து ம் சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்றார்.

(ஷம்ஸ் பாஹிம்)


Add new comment

Or log in with...