மரங்களை வெட்ட அனுமதி கோரி தோட்ட உரிமையாளர் உண்ணாவிரதம் | தினகரன்

மரங்களை வெட்ட அனுமதி கோரி தோட்ட உரிமையாளர் உண்ணாவிரதம்

தனது தோட்டத்திலுள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரியும்,தோட்ட மரங்களை அரசாங்கம் அபகரித்துச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை எனவும் தோட்ட உரிமையாளர் ஒருவர் பரணில் மேல் அமர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகிறார். தோட்டத்தின் நடுவே மரங்களின் மீது பரண் அமைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இவர், மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளார்.

வட்டகொடை பகுதியிலுள்ள தோட்ட உரிமையாளரே இந்த போராடடத்தை ஆரம்பித்துள்ளார். வட்டகொடை, மடக்கும்புர, வேவஹென்ன கிராமத்திலுள்ள எம்.ஜி.பந்துல பண்டார என்பவர் இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

‘நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கு அதிகாரம் உண்டு. எனது தோட்ட மரங்களை விற்றுத்தான் எனது 5 பிள்ளைகளையும் படிப்பிக்கிறேன். நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டி எடுத்துச்செல்ல ஒருபோதும் இடமளியேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளை பெற்றிருந்த வேளையில் அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்த மரங்களை வெட்டி விற்றால்தான் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

இதற்கென 2016.10.18ஆம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பெறுவதற்காக 12,000 ரூபா தொடக்கம் 15,000 ரூபா வரையிலான தொகையும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

 


Add new comment

Or log in with...