அரசிலிருந்து வெளியேறியோர் மீண்டும் இணைவு | தினகரன்

அரசிலிருந்து வெளியேறியோர் மீண்டும் இணைவு

அரசாங்கத்தை விட்டு வெளியேறி மஹிந்த ஆதரவு அணியுடன் கூட்டு சேரப்போவதாக கூறியவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியைப் பலப்படுத்துவதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார். "அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறிய பலரும் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பல பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்." என்றும் அவர் கூறினார்.

அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும் அதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களின் முக்கிய பொறுப்புக்களை மேற்படி எம்.பிக்கள் பொறுப்பேற்றதாகவும் அமைச்சர் அமரவீர மேலும் விளக்கமளித்தார்.

இக்கூட்டத்தில் தேர்தல் குழு, மறுசீரமைப்புக்குழு,பொருளாதார குழு, பிரசாரக் குழு,வேட்பாளரை தெரிவு செய்யும் குழு ஆகியன நியமிக்கப்பட்டதாகவும். இதற்கான முக்கிய பொறுப்புக்களையே இந்த எம்,பிக்கள் பொறுப்பேற்றிருபட்பதாகவும் அமைச்சர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 

 


Add new comment

Or log in with...