தென்னாபிரிக்க ஒருநாள் போட்டி அணிக்கு டுபெலசிஸ் தலைவர் | தினகரன்

தென்னாபிரிக்க ஒருநாள் போட்டி அணிக்கு டுபெலசிஸ் தலைவர்

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் தலைவராக டுபெலிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென் ஆபிரிக்க அணியின் அனைத்து நிலைக்கும் டுபெலசிஸ் தலைவராக உள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் தலைவர் பதவியில் இருந்து டிவில்லியர்ஸ் கடந்த மாதம் விலகினார். அவருக்கு பதிலாக டுபெலசிஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கருதப்பட்டது.

அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி தலைவராக டுபெலசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தென் ஆபிரிக்க அணியின் அனைத்து நிலைக்கும் டுபெலசிஸ் தலைவராக உள்ளார். அவர் ஏற்கனவே டெஸ்ட், 20 ஓவர் போட்டியில் தலைவராக பணியாற்றி வருகிறார்.

டுபெலசிஸ் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரதின கோப்பையில் விளையாடும் உலக லெவன் அணிக்கும் தலைவராக உள்ளார். தென்னாபிரிக்க அணி அடுத்த மாதம் பங்களாதேசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. டுபெலசிஸ் ஏற்கனவே 9 ஒருநாள் போட்டிக்கு தலைவராக பணியாற்றி இருக்கிறார். டிவில்லியர்ஸ் காயம் அடைந்ததால் இந்த பொறுப்பை ஏற்று இருந்தார்.

டிவில்லியர்ஸ் தென் ஆபிரிக்கா அணியின் வெற்றிக்கான தலைவர்களில் ஒருவராவார். அவர் தலைமையில் 103 போட்டியில் தென் ஆபிரிக்கா ஆடியுள்ளது. இதில் 59 போட்டியில் வெற்றி பெற்றது. 


Add new comment

Or log in with...