டெஸ்ட் கிரிக்ெகட்டிலிருந்து ஷாகிப் அல்-ஹசன் ஓய்வு | தினகரன்

டெஸ்ட் கிரிக்ெகட்டிலிருந்து ஷாகிப் அல்-ஹசன் ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எதிர்வரும் ஆறுமாத காலத்திற்கு ஓய்வு பெறுவதற்கான பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் -ஹசனின் வேண்டுகோளுக்கு பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள தென் ஆபிரிக்க அணியுடனான தொடரில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல்-ஹசன் விரும்பினால் விளையாட முடியும் என்று பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் கிரிக்கட் நடவடிக்கைகளுக்கான தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஆறுமாத காலத்திற்கு ஓய்வு தேவைப்படுவதாக சாகிப் அல்- ஹசன் கடிதம் மூலம் கேட்டிருந்தார். அதற்கேற்ப ஓய்வு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனினும் அவர் விரும்பினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமுடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக வீரர் ஒருவர் தானாகவே டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல்--ஹசன் முன்னணி வீரராக வலம்வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...