பாசிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹெட்ரிக் கோல் அடித்து சாதனை | தினகரன்

பாசிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹெட்ரிக் கோல் அடித்து சாதனை

லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹெட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பாசிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹெட்ரிக் அடித்து சாதனை படைத்துள்ளார்.

லா லிகா தொடரில் நடைபெற்ற போட்டியில் பாசிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பாசிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார். இதன்மூலம் பாசிலோனா அணிக்காக அவர் 38 முறை ஹெட்ரிக் கோல்கள் அடித்துள்ளார்.

இதில் யூரோப்பியன் சம்பியன்ஸ் லீக் தொடரில் 7 முறை அடித்த ஹெட்ரிக் கோல்களும் அடங்கும்.87-வது நிமிடத்தில் சக வீரர் பிக்காய் ஒரு கோலும், 90-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பாசிலோனா 5-0 என அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்த பருவகாலத்தில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது பாசிலோனா. 


Add new comment

Or log in with...